மின்கசிவால் தீ விபத்து: 5,000 கோழிக்குஞ்சுகள் பலி

மின்கசிவால் தீ விபத்து: 5,000 கோழிக்குஞ்சுகள் பலி

படம்: ஊடகம்

31 Jul 2023 - 4:00 pm

1 mins read

ஈரோடு: மின்கசிவு காரணமாக கோழி பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஐந்தாயிரம் கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தனர்்.

ஈரோடு மாவட்டம், ஆண்டிகாடு தோட்டம் பகுதியில் இந்த விபத்து சனிக்கிழமை நடந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

முத்துசாமி என்பவர் தனக்குச் சொந்தமான அந்தக் கோழிப்பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகளை வளர்த்து வந்தார். சனிக்கிழமை காலை கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்தபோது, திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ மூண்டது.

இதில் தகரசெட்டால் வேயப்பட்ட கூரைகள் தீப்பிடித்து முழுவதும் எரிந்தது. தமக்கு மொத்தம் ரூ.23 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக முத்துசாமி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்