பிறந்த நாளில் தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்

பிறந்த நாளில் தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்

3 mins read
924f3e23-79d0-4244-8c60-ac7d48ef1f4f
அவரது உடல்நிலை குறித்து ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும், யாரும் எதற்கும் கவலைப்படாதீர்கள். விஜயகாந்த் நம்முடன் நூறாண்டு காலம் நிச்சயம் இருப்பார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: கேப்டன்’, ‘கறுப்பு எம்.ஜி.ஆர்’ என்று தேமுதிக தொண்டர்களால் அழைக்கப்படும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை (ஆக.,25) தனது 71வது பிறந்த நாளையொட்டி கட்சித் தொண்டர்களையும் நிா்வாகிகளையும் சந்தித்தார்.

உற்சாகமாகக் கையசைத்த விஜயகாந்த்தைப் பார்த்து, கட்சியினர் ஆரவாரம் செய்தனர். நிர்வாகிகளைப் பார்த்து கும்பிட்ட விஜயகாந்த், நிர்வாகிகள், தொண்டர்களுடன் குழுவாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரை சந்தித்த மகிழ்ச்சியில் ‘கேப்டன் வாழ்க’ என தொண்டர்கள் உற்சாக முழக்கம் எழுப்பினர்.

“தயவுசெய்து ஊடகங்கள், யூடியூப் சேனல்கள் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் தவறாக எழுதாதீர்கள். காரணம், கடைக்கோடியில் இருக்கும் தேமுதிக தொண்டர்கள் கஷ்டப்படுகின்றனர். எனவே, விஜயகாந்த் நன்றாக இருக்கிறார்” என்றார் பிரேமலதா.
“தயவுசெய்து ஊடகங்கள், யூடியூப் சேனல்கள் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் தவறாக எழுதாதீர்கள். காரணம், கடைக்கோடியில் இருக்கும் தேமுதிக தொண்டர்கள் கஷ்டப்படுகின்றனர். எனவே, விஜயகாந்த் நன்றாக இருக்கிறார்” என்றார் பிரேமலதா. - படம்: இந்திய ஊடகம்

சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.

வந்திருந்த தொண்டர்களுக்கு காலையில் இட்லி, பொங்கல் வடையுடன் வழங்கப்பட்டது. தொடர்ந்து காலை 11 மணி அளவில் இருக்கையில் அமர்ந்தபடியே மேடைக்கு அழைத்து வரப்பட்ட நடிகர் விஜயகாந்த், தொண்டர்களை பார்த்து லேசாக கை அசைத்தார். உற்சாகமாக ‘தம்ஸ் அப்’ காட்டினார்.

உடல்நலம் குன்றியிருப்பதால் இருக்கையில் அமர்ந்தபடியே தொண்டர்களைப் பார்த்து கையசைத்து வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார் விஜயகாந்த்.

தனது பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்த்தை பார்க்க, கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த விஜயகாந்த், தொண்டர்களை நோக்கி கையசைத்தார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்த்தை பார்க்க, கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த விஜயகாந்த், தொண்டர்களை நோக்கி கையசைத்தார். - படம்: இந்திய ஊடகம்

கடந்த பல ஆண்டுகளாக தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக அறிவித்து பொதுமக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார் விஜயகாந்த். நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

உடல்நிலை பிரச்சினையால் பொது வெளியில் விஜயகாந்த் வெளியில் வருவதில்லை. பல நாள்களுக்குப் பின்னர் அவரைப் பார்த்ததில் தொண்டர்கள் கண்ணீர் மல்கினர்.
உடல்நிலை பிரச்சினையால் பொது வெளியில் விஜயகாந்த் வெளியில் வருவதில்லை. பல நாள்களுக்குப் பின்னர் அவரைப் பார்த்ததில் தொண்டர்கள் கண்ணீர் மல்கினர். - படம்: இந்திய ஊடகம்

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். சுமார் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர் அதனைத் தாண்டி உதவும் குணம் மூலமாகவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். சினிமாவைத் தொடர்ந்து அரசியலிலும் களமிறங்கி எம்.எல்.ஏ ஆகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்தார்.

அடுத்த செப்டம்பர் 14-ம் தேதி அவரது கட்சி, 18 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார்.

அவருக்கு பதிலாக தேமுதிக கட்சி பணிகளை அவரது மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் கவனித்து வருகின்றனர். அவ்வப்போது, குடும்பத்துடன் விஜயகாந்த் இருக்கும் புகைப்படத்தை அவரது மகன்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இரு மகன்களுடன் விஜயகாந்த். அண்மையில் எடுக்கப்பட்ட படம்.
இரு மகன்களுடன் விஜயகாந்த். அண்மையில் எடுக்கப்பட்ட படம். - படம்: இந்திய ஊடகம்

விஜயகாந்தின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இந்த நிகழ்வு தொடா்பாக விஜயகாந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில், என்னுடைய உடல்நலன் தொடா்பாக வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். நான் நலமுடன் உள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

விஜயகாந்த்தின் பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, எம்.பி., கனிமொழி, ம.நீ.ம., கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த தொண்டர்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் பேசும்ப்போது, “கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தவறான செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த தொண்டர்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் பேசும்ப்போது, “கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தவறான செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். - படம்: இந்திய ஊடகம்

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த படத்துக்கு ’படைத்தலைவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தனது மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜயகாந்த் வெளியிட்டார்.

நிறைவாக மீன் குழம்பு, கோழி கறியுடன் ஆட்டுக்கறி விருந்துடன் சுடச் சுட மதிய சாப்பாடு தொண்டர்களுக்கு பரிமாறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன், கட்சியின் மாநில நிர்வாகிகள் எல்.கே. சுதிஷ், பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர்கள் மற்றும் படைத்தலைவன் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

பல மாதங்களுக்கு பிறகு விஜயகாந்த் தொண்டர்களைச் சந்தித்த நிலையில், தே.மு.தி.க. அலுவலகமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்