விசாரணைக்கு நேரில் முன்னிலையாக சீமானுக்கு அழைப்பாணை

1 mins read
bd753f04-5292-4a75-bb35-901fd716a3e3
சீமான், விஜயலட்சுமி. - படம்: ஊடகம்

சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்துள்ள புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் முன்னிலையாக காவல்துறை அழைப்பாணை அனுப்பி உள்ளது.

தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சீமான் ஏமாற்றிவிட்டதாகவும் பலமுறை கருக்கலைப்பு செய்யச் சொன்னதாகவும் விஜயலட்சுமி கூறி உள்ளார்.

சமூக ஊடகங்கள் மூலம் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை சீமான் தொடர்ந்து மறுத்து வருகிறார். இதையடுத்து, நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க சீமானுக்கு சென்னை காவல்துறை அழைப்பாணை அனுப்பி உள்ளது. வரும் செப்டம்பர் 12ஆம் தேதி சீமான் காவல்துறை விசாரணைக்கு முன்னிலையாவார் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்