சசிகலா: அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவே நிதி இல்லை

சசிகலா: அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவே நிதி இல்லை

1 mins read
c6212eca-94a2-49ff-a71c-0277eb878c62
சசிகலா. - படம்: ஊடகம்

காஞ்சிபுரம்: தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மாதம் சம்பளம் வழங்கவே போதுமான நிதி இல்லை என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

நிதிநிலை இப்படியிருக்கும்போது மகளிர்க்கு மாதந்தோறும் எவ்வாறு உரிமைத்தொகை வழங்க முடியும் என காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கேள்வி எழுப்பினார்.

தேர்தலில் வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் யாராக இருந்தாலும் அனைவரையும் சமமாக நினைக்க வேண்டும் என்றும் இதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்றும் சசிகலா கூறினார்.

“ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாகத்தான் திமுகவினர் தேர்தலில் வாக்குறுதி அளித்தனர். அதை மறந்துவிடக் கூடாது.

“பிளவுபட்டுள்ள அதிமுக மீண்டும் இணையுமா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. வரும் மக்களவைத் தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியமாகும்,” என்றார் வி.கே.சசிகலா.

குறிப்புச் சொற்கள்