காவிரி விவகாரம்: தமிழக எம்பிக்கள் குழு டெல்லி பயணம்

1 mins read
cf93083c-bdc4-4431-a78b-db61fafbb8e5
துரைமுருகன். - படம்: ஊடகம்

சென்னை: காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழகத்தின் அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவுடன் அமைச்சர் துரைமுருகன் புதுடெல்லி செல்கிறார்.

இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடகாவுக்கு தகுந்த அறிவுரையை வழங்க வேண்டும் என்று தமிழக எம்பிக்கள் மத்திய நீர்வள அமைச்சரிடம் வழங்க உள்ள மனுவில் குறிப்பிடப்படும் எனத் தெரிகிறது.

தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் முழுமையாக கிடைக்காததால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தமிழகக் குழு மத்திய அமைச்சரிடம் விளக்கும் என்றும் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு தகுந்த அறிவுரையை வழங்கக் கோரும் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்