சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
கட்சியின் முடிவைத்தான் தாம் அறிவிப்பதாகவும் கூட்டணி முறிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைதான் காரணம் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
“ஜெயலலிதாவை விமர்சித்து மன்னிப்பு கேட்ட நிலையில் அண்ணா குறித்தும் அண்ணாமலை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்,” என்றார் ஜெயக்குமார்.
அண்மைக்காலமாக அதிமுக, தமிழக பாஜக தலைவர்கள் இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விமர்சித்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று தமிழக பாஜக பிரமுகர்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.