மதுரை: தமிழ்நாட்டில் கூட்டணி வைத்து செயல்படும் பாஜக-அதிமுகவை திமுகவின் இளைஞரணித் தலைவரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கிண்டல் செய்தார்.
தமிழ்நாடு ஒரு வீடு என்றும் அதில் கிடக்கும் புதர் குப்பைதான் அதிமுக என்றும் குப்பை காரணமாக தமிழ்நாட்டில் பாஜக என்ற பாம்பு புகுந்துவிட்டது என்றும் உதயநிதி பேசினார்.
தமிழ்நாட்டில் செயல்படுவது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல அது ‘அமித் ஷா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று உதயநிதி வர்ணித்தார்.
மேலிடத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால்போதும். அதற்கு தகுந்தாற்போல் அதிமுக செயல்படும். ஆகையால், வாக்காளர்கள் வரும் தேர்தல்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொண்டு புதர் குப்பையையும் பாம்பையும் அகற்ற வேண்டும் என்று உதயநிதி பேசினார்.
மதுரையில் திமுகவைச் சேர்ந்த 1,519 மூத்த தொண்டர்களுக்கு பொற்கிழி (ரொக்க வெகுமதி) வழங்கும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசினார்.