சென்னை: தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னையில் அக்டோபர் 14-ந் தேதி மகளிர் உரிமை மாநாடு நடைபெற உள்ளது.
திமுக துணைப்பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சிகளின் மகளிர் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

