சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு திடீரென அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்.
அக்டோபர் முதல் தேதி சென்னையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக, பாஜக இடையேயான கூட்டணி முறிந்துவிட்ட நிலையில் திமுக கூட்டம் நடைபெற உள்ளதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து மாவட்ட செயலாளர்களின் இறுதிக் கருத்து கேட்டறியப்படும் என்றும் கூறப்படுகிறது.

