தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

3,000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்லியல் எச்சங்கள்; ஆய்வு நடத்த வலியுறுத்தும் பொதுமக்கள்

1 mins read
02cea4b1-9039-4a98-936f-d5695cfdde75
தொல் பொருள்கள் காணப்பட்ட இடத்தில் சமூக ஆர்வலர்கள். - படம்: ஊடகம்

திருப்பூர்: மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்லியல் எச்சங்கள், நடுகல் உள்ளிட்டவை இருப்பதால் திருப்பூர் மாவட்டம், குமரிக்கல்பாளையம் பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதை வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ‘களஞ்சியம்’ விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம், குமரிக்கல்பாளையம் பகுதியில் கிடைக்கும் தொல் பொருள்கள், கீழடி, ஆதிச்சநல்லுார் நாகரிக்கத்துக்கு முற்பட்டதாகக்கூட இருக்கலாம் என்றார்.

‘’ஒரு வாரத்துக்குள், தொல்லியல் ஆய்வுக்குழுவினருடன் முகாமிட்டு, அங்குள்ள தொல்லியல் எச்சங்கள் குறித்து ஆய்வு செய்து, அதன் அறிக்கையை மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பி வைப்பதாக, அதிகாரிகள் குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

“இந்த இடத்தில் விரிவாக ஆய்வு நடத்தும்போது, தமிழர்களின் பல மறைக்கப்பட்ட பாரம்பரியம், கலாசாரத் தகவல்கள் வெளிவர வாய்ப்புண்டு,” என்று சுப்ரமணியன் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்