விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் அகழாய்வுப் பணி நடந்து வருகிறது. இதில் பல்வேறு அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வின்போது, மண்ணில் செய்யப்பட்ட திமிலுடன் கூடிய காளை உருவம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், முன்னோர்கள் பல்வேறு வீர விளையாட்டுக்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிவித்தார்.
அகழாய்வில் திமிலுடன் கூடிய காளை உருவம்
படம்: ஊடகம்
12 Oct 2023 - 5:48 pm
1 mins read
குறிப்புச் சொற்கள்
