தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சேகர் பாபு: கோவில் நிதியை பக்தர்களின் மேம்பாட்டிற்காகச் செலவிடுவது குற்றமாகாது

1 mins read
a38e6ddd-f618-40a1-b902-f3fd607f1080
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு. - கோப்புப்படம்

சென்னை: கோயம்பேடு, குறுங்காலீஸ்வரர் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம், தேர், அன்னதானக் கூடம் ஆகியவற்றுக்கான கட்டுமானப் பணியை அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் நிதியின் மூலம் ரூ.29 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் புதிய கலாசார மையம் குறித்து பாஜகவினரால் கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. இது முழுமையாக பக்தர்களின் பயன்பாட்டிற்காக கோவிலின் அறங்காவலர்களின் ஒப்புதலுடன் நமது கலை, கலாசாரம், பண்பாட்டை காக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

கோவிலின் நிதியை அப்படியே வைத்திருப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகின்றது. அதனை கொண்டு பக்தர்களின் மேம்பாட்டிற்காக செலவிடுவது குற்றமாகாது. ஆகவே சட்டத்திற்கு உட்பட்டு, அறங்காவலர் குழுவின் ஒப்புதலோடு அந்த நிதியை கலாசார நிலையம் கட்டுவதற்குப் பயன்படுத்த இருக்கிறார்கள். இன்னும் ஐந்து ஆண்டுகளில் வரலாறு காணாத அளவில் குடமுழுக்கு விழா நடத்தப்படும்.

திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் கோவில்கள் அத்தனையும் புனரமைக்கின்ற பணிகளில் முழு வீச்சோடு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். ஐந்து ஆண்டுகள் நிறைவுறுகின்றபோது அனைவரும் புருவத்தை உயர்த்தி, வசை பாடுபவர்களும் வாழ்த்துகின்ற ஒரு நல்ல சூழ்நிலை உருவாகும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்