நெல்லை: தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசைக் கலைப்பது குறித்து மத்திய அரசு யோசித்துதான் பார்க்கட்டுமே என்று சவால் விடுப் பதுபோல் குறிப்பிட்டார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அண்மையில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகச் சாடி யிருந்தார். மேலும், தமிழகத்தில் ஆளுநருக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.
எனினும், தமிழக அரசைக் கலைக்கும் யோசனை மத்திய அரசுக்கு இல்லை என்றும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இதுவரை எந்த மாநில அரசையும் கலைத்ததில்லை என்றும் கூறியிருந்தார் எல்.முருகன். அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி சவால் விடுத்துள்ளார்.

