தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீபாவளி பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகளை அறிவித்த காவல்துறை

2 mins read
fac74d35-8ef1-4ef1-acc7-256a61547c9a
தீபாவளி நெருங்கு வதை அடுத்து சென்னையில் உள்ள பெரிய துணிக்கடை களில் கூட்டம் அலைமோதியது. சாலையோர துணிக்கடை களிலும்கூட வியாபாரம் களைகட்டியுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். - படம்: ஊடகம்

சென்னை: தீபாவளிப் பண்டிகையின்போது பொது மக்கள் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பட்டாசுகளை வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள், பாதுகாப்பு அறிவுரை களையும் சென்னை காவல் துறை வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவிற்கேற்ப அனுமதிக்கப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்பட்டுள்ள பட்டாசுகளை மட்டுமே விற்கவும் வெடிக்கவும் வேண்டும் என காவல் துறை கூறியுள்ளது.

தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என காவல் துறை கூறியுள்ளது.

வாகனங்கள், பெட்ரோல் நிலையங்கள் அருகே பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் மருத்துவமனைகள் அருகே அதிக ஓசையை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பட்டாசுகளைக் கொளுத்தி மேலே தூக்கி எறிந்து வேடிக்கை பார்க்க முயற்சி செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட 19 அறிவுரைகளை வெளியிட்டுள்ளது காவல் துறை.

தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் புத்தாடைகள், பட்டாசுகள் விற்கும் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

சென்னையில் 18,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, சென்னையில் தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குவிந்த மக்களால் கடைகளில் வியாபாரம் களை கட்டியது.

ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து புத்தாடைகளை வாங்கிச் சென்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பெரிய துணிக்கடைகள் மட்டுமல்லாமல், சாலையோரங்களில் துணிகளை விற்கும் சிறு கடைகளிலும் மக்கள் கூட்டத்தைப் பார்க்க முடிந்தது.

துணிக்கடைகள் மட்டுமல்லாமல் நகைக்கடைகள், மலிவு விலை அணிகலன்கள் விற்கும் கடைகளிலும் மக்கள் ஆர்வத் துடன் குவிந்தனர். இதனால் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 7,200 பட்டாசுக் கடைகளுக்கு தீயணைப்புத்துறை அனுமதி வழங்கியுள்ளது. சென்னையில் மட்டும் 890 கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்