ரயில்களில் பட்டாசு கொண்டுசெல்லக் கூடாது என காவல்துறை கண்டிப்பு

சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோட்டத்தில் உள்ள 245 ரயில் நிலையங்களில் 1,300 காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சென்னை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதியில் உள்ள ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று.ரயில்வே காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் தெரிவித்துள்ளார். தீபாவளிப் பண்டிகையின்போது எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக, ரயில் பயணிகள், பட்டாசுகளை தங்களுடன் எடுத்துச் செல்லக்கூடாது. அவ்வாறு செய்பவர்களுக்கு குறைந்தது ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். விழாக் கால நெருக்கடியால் திருட்டு போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் வகையில் ஏராளமான காவல்துறையினர் ரயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற பண்டிகை காலங்களில் வட இந்தியாவில் இருந்து திருட வரும் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை நியமிக்கப்பட்டுள்ளது என்று சுகுணா சிங் கூறியுள்ளார்.

மேலும், ரயில்களில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் படை, சிறப்புக் கண்காணிப்புக் காவலா்கள், பயணச்சீட்டு பரிசோதகா்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனா்.

முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் புலம்பெயா் தொழிலாளா்கள் ஏறுவதைத் தடுக்கும் வகையில் அவா்கள் மாற்று ரயிலில் செல்ல வழிவகை செய்யப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!