234 தொகுதிகளில் வலம் வரும் திமுக இருசக்கர வாகனப் பேரணி

1 mins read
dc28ffc0-78db-4738-8f90-8a42a306c48c
இருசக்கர வாகனப் பேரணியை திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். - படம்: தமிழக ஊடகம்

கன்னியாகுமரி: திமுக இளைஞரணி மாநில மாநாடு டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திமுக மேற்கொண்டு வருகிறது.

இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி அக்கட்சி சார்பில் இருசக்கர வாகனப் பேரணி தொடங்கியுள்ளது. அந்தப் பேரணியை திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் புதன்கிழமை தொடங்கி வைத்தார். இப்பேரணி 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 8,647 கிலோமீட்டர் தூரம் செல்லும். மொத்தம் 13 நாட்கள் நடைபெறும் பேரணி அடுத்த மாதம் சேலத்தில் நிறைவடைய உள்ளது.

குறிப்புச் சொற்கள்