30 மணி நேரமாக மின்சாரம் இல்லை: கிரிக்கெட் வீரர் அஷ்வின்

1 mins read
64aa8c81-a62d-44e0-b9d3-cae7c6a34dde
கிரிக்கெட் வீரர் அஷ்வின். - படம்: ஊடகம்

சென்னை: மிச்சாங் புயலின் தாக்கத்தால் ஏறக்குறைய முப்பது மணி நேரம் மின்சாரம் இன்றித் தவிப்புக்கு ஆளானதாக இந்தியக் கிரிக்கெட் அணி வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபட்டிருக்கும் என நினைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளரான, தமிழகத்தைச் சேர்ந்த அஷ்வின், சென்னையில் உள்ள வேளச்சேரி பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், மிச்சாங் புயல் வீசியபோது வேளச்சேரியில் முப்பது மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லை என சமூக ஊடகத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

அதை மேற்காட்டி பதிவிட்ட அஷ்வின், “நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது என உறுதியாகத் தெரியவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார். சென்னையில் மழைக்காலங்களில் மோசமாக பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக உள்ளது வேளச்சேரி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்