சென்னை: பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்தின் மூலம் சென்னையில் 444 லாரிகள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மாலை வரை 4,227 முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு உள்ளது என்றும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் அனைத்து பகுதிகளிலும் சீரடைந்துள்ளது என்றும் அவ்வாரியம் தெரிவித்தது.
மேலும், சென்னையில் செயல்படும் 74 நிவாரண முகாம்களுக்கும் உணவு தயாரிக்கும் கூடங்களுக்கும் தேவையான குடிநீர் வழங்கப்படுகிறது.