ஆசிரியருக்கு ரூ.1.42 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஆசிரியருக்கு ரூ.1.42 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

1 mins read
2295d1f5-3c47-4d78-a3ed-6df4b528d8b2
படம் - ஊடகம்

தூத்துக்குடி: தென்காசி கீழப்புலியூரைச் சோ்ந்த லதா என்ற ஆசிரியருக்கு ரூ.1.42 லட்சம் இழப்பீடு வழங்க வங்கிக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

தென்காசியிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்த லதாவின் கணக்கில் இருந்து ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி 11 முறை பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதுகுறித்து வங்கி மேலாளரிடம் புகாா் அளித்தபோது, அவர் முறையாக பதில் கூறவில்லையாம். காவலர்களின் விசாரணையில், போலி ஏடிஎம் அட்டை மூலம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது.

இந்த வழக்கை தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் விசாரித்து, ஆசிரியை இழந்த தொகையான ரூ.107,131, சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.25,000, வழக்கு செலவுத் தொகையாக ரூ.10,000 என ரூ. 142,131ஐ ஒரு மாதத்திற்குள் வழங்குமாறு தென்காசி வங்கிக்கு உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்