தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் கனமழை: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

1 mins read
5685a8c3-3e5b-4f6e-8213-3800d64cb36a
சென்னை மாநகரை மிச்சாங் புயல் புரட்டிப்போட்டது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் எதிர்வரும் 16, 17ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அப்பகுதிகளுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. அண்மையில் வீசிய மிச்சாங் புயலானது சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைப் புரட்டிப் போட்டுள்ளது.

இந்நிலையில், தென், டெல்டா மாவட்டங்கள் கனமழையை எதிர்கொள்ள இருக்கின்றன.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அம்மையம் கணித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்