கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை

தூத்துக்குடி: தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமையும் கனமழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கன மழை பெய்துவருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் சனிக்கிழமை முதல் வருகிற 22ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. குறிப்பாக தென்மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு நிலையம் முன்னதாக அறிவித்திருந்தது.

தொடர்ச்சியான மழையால் அணைகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 5,000 கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆற்றங்கரையோர ஊர்களில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் அருகே செல்லவோ கூடாது என்றும் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர், ஓரிரு நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு சில இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்படலாம்என்பதால் குடிநீர் விநியோகம் மற்றும் ஆழ்கிணறு மோட்டார் இயக்கத்தில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றில் 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது என்று நேற்று அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி கடற்கரைசாலைப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பெரிய தாழை மீனவர்கள் வாழும் ஊரில் பெய்த கனமழை காரணமாக மேலத்தெரு, சேவியர் காலனி போன்ற பகுதிகளில் வீடுகள் மற்றும் தெருக்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.

கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல்மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 25 பேர் கொண்ட 4 தேசிய பேரிடர் மீட்புக் குழு வருகை தர உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!