‘மத்திய குழுவினரின் பாராட்டு அவதூறு பரப்பியவர்களுக்கு விழுந்த பளார் அறை’

சென்னை: “விமர்சனம் செய்வதற்கும், வீண்பழி சுமத்துவதற்கும் எதிர்க்கட்சிகள் முனைப்புக் காட்டுவதைத் தவிர மக்களின் துயர் துடைக்க முன்வரவில்லை.

மிச்சாங் புயல் பாதிப்பை ஆய்வு செய்த மத்திய குழுவினர் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை பாராட்டினர். இது அவதூறு பரப்பி அரசியல் செய்ய நினைப்பவர்களின் கன்னத்தில் விழுந்த பளார் அறை” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், பேரிடரிலும் அரசியல் செய்யும் குணம் படைத்தவர்களைப் பொருட்படுத்தாமல் மக்கள் நலன் காக்கும் அரசு திமுக.

பேரிடரிலிருந்து மீண்ட மக்களின் மகிழ்ச்சியான மனநிலை தொடர வேண்டும். எத்தகைய இடர் வந்தாலும், அதிலிருந்து மக்களைக் காப்பதில் அக்கறையும் பொறுப்பும் கொண்ட அரசே திமுக அரசு. இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் தொடரும்.

திராவிட மாடல் அரசின் பணிகளை பிற மாநிலங்கள் கவனிக்கின்றன. பங்களா வாசலில் உள்ள பெரிய கதவு திறக்கும்வரை காத்திருக்கும் முந்தைய ஆட்சியின் நிலைமை இன்றில்லை.

தொலைக்காட்சியில் பார்த்துதான் விவரம் தெரிந்துகொண்டேன் என்று கூறும் முந்தைய அரசு நிலை இன்றில்லை. மக்கள் பிரதிநிதிகளை அணுக முடியும், கேள்வி கேட்க முடியும் என்ற ஜனநாயகப்பூர்வமான அரசு செயல்பட்டு வருகிறது என்று அக்கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!