வெள்ளத்தில் காணாமற்போன இளையரைத் தேடும் பணி தொடர்கிறது

வெள்ளத்தில் காணாமற்போன இளையரைத் தேடும் பணி தொடர்கிறது

1 mins read
12492b61-29ba-44e1-a61f-259bba8b4311
பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியிலுள்ள ஓடையில் காணாமற்போன இளையரைத் தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர்.  - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிளில் சென்ற சே.அருணாசலம், 19, என்ற இளையர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவும் நிலையில், அங்குள்ள ஓடையில் அவரைத் தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற அருணாசலத்தைக் காணவில்லை என்று பெருமாள்புரம் காவல்நிலையத்தில் அருணாசலத்தின் பெற்றோர் புகார் செய்தனர்.

இதனிடையே என்ஜிஓ காலனியிலுள்ள ஓடையில் தீயணைப்புப் படையினர் தேடும் பணியில் ஈடுபட்டபோது, அருணாசலம் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை தீயணைப்பு படையினர் மீட்டனர். தொடர்ந்து தேடும் பணி நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்