மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அடுத்த ஆண்டு வழக்கமான இடத்தில்தான் நடைபெறும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சங்கீதா, அடுத்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடம் மாறாது என்றார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக கீழக்கரை கிராமத்தில் 44 கோடி ரூபாய் செலவில் 66 ஏக்கரில் திடல் அமைக்கப்பட்டு வருகிறது.
எனவே, 2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தத் திடலில்தான் ஜல்லிக்கட்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்புதிய திடலில் பத்தாயிரம் பேர் அமர்ந்து ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசிக்க முடியும்.