கடலில் தீப்பிடித்த படகு

கடலில் தீப்பிடித்த படகு

1 mins read
2c487087-d87c-4d39-b3a0-3769970cc71e
பாம்பன் தென்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் தீப்பிடித்தது. - படம்: தினத்தந்தி

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் தென்கடல் பகுதியில் காலின்ஸ் என்பவருக்குச் சொந்தமான படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்தப் படகில் நேற்று (டிசம்பர் 23) இரவு பெரிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவத்தில் 90 லட்ச ரூபாய் மதிப்பிலான அந்தப் படகு முற்றிலும் எரிந்து நாசமானது.

மின்கசிவால் படகில் தீ மூண்டதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

தீச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்