நிர்மலா சீதாராமனிடம் 72 பக்க மனு அளித்த தமிழக அரசு

நிர்மலா சீதாராமனிடம் 72 பக்க மனு அளித்த தமிழக அரசு

1 mins read
e9254e78-1ec9-4ae8-9f22-dbdf70e8c4c1
படம் - ஊடகம்

சென்னை: தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், பாதிப்புக்கு ஏற்ப மத்திய அரசு நிதி வழங்கக் கோரி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனிடம் தமிழக அரசு சார்பில் 72 பக்க கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் “இந்தியாவிலேயே இரண்டாவது நீளமான கடலோரப் பகுதிகளைக் கொண்டுள்ளதுடன், கடந்த நூறாண்டுகளில் 50 புயல்களை எதிர்கொண்டுள்ள தமிழ்நாடு தொடர்ந்து இத்தகைய இயற்கைச் சீற்ற ஆபத்துகளுக்கு உள்ளாகி வருகிறது.

“தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் மூத்த அதிகாரிகள் நிர்மலா சீதாராமனிடம் தற்போதைய நிலையையும் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளையும் பற்றி எடுத்துரைத்தனர். மேலும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் குறித்த விவரங்கள் அடங்கிய 72 பக்க விரிவான கோரிக்கை மனுவையும் அளித்து, இப்பேரிடரை எதிர்கொண்டு, நிவாரண மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ஆதாரங்களின் தேவையை வலியுறுத்தி உள்ளனர்,” எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்