விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

1 mins read
bd844101-2fba-4f3b-94ba-58e71cb25e38
படம் - ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏறக்குறைய 19 நாள்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார் என்றும் பூரண நலத்துடன் உள்ளார் என்றும் பரிசோதனை முடிந்து வியாழக்கிழமை வீடு திரும்புவாா் என்றும் தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 18ஆம் தேதி காய்ச்சல், இருமல், சளித் தொற்றால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, டிசம்பர் 11ஆம் தேதி வீடு திரும்பிய நிலையில், இப்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மருத்துவமனை