மருந்தகங்களில் கண்காணிப்புக் கருவிகள்

மருந்தகங்களில் கண்காணிப்புக் கருவிகள்

1 mins read
4b533bc7-7811-458a-a5d7-e848c5f0b060
தமிழகத்தில் உள்ள மருந்தகங்களில் கண்காணிப்பு தீவிரமடையும். - படம்: ஊடகம்

காஞ்சிபுரம்: போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க ஏதுவாக காஞ்சிபுரத்தில் உள்ள மருந்தகங்களில் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்த வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த 30 நாள்களுக்குள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த உத்தரவை செயல்படுத்த தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், மருந்தக உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும், பல மாவட்டங்களில் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாகக் கூறப்படுவதை அடுத்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்