யூடியூப், இன்ஸ்டகிராம் ஆகியவற்றுக்கு இணையாக புதிய செயலி: கோவை இளையருக்கு குவியும் பாராட்டு

யூடியூப், இன்ஸ்டகிராம் ஆகியவற்றுக்கு இணையாக புதிய செயலி: கோவை இளையருக்கு குவியும் பாராட்டு

1 mins read
94583711-bb74-4b34-87bb-0fcfe2eef89b
உதய் பிரகாஷ். - படம்: ஊடகம்

கோவை: யூடியூப், இன்ஸ்டகிராம், பேஸ்புக் ஆகிய தளங்களுக்கு இணையாக புதிய செயலி ஒன்றை உருவாக்கி உள்ளார் கோவையைச் சேர்ந்த உதய் பிரகாஷ் என்ற இளையர்.

தனது செயலிக்கு ‘ஸைனோ ஃபிளிக்ஸ்’ என்று பெயரிட்டுள்ள அவர், செவ்வாய்க்கிழமை அதை செய்தியாளர்களிடம் அறிமுகம் செய்தார்.

இப்புதிய செயலி மூலம் காணொளிகளைப் பதிவேற்றம் செய்து கணிசமான வருமானத்தை ஈட்ட முடியும் என்றார் உதய் பிரகாஷ்.

‘ஸைனோ ஃபிளிக்ஸ்’ செயலியின் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இவர் தற்போது தனது செயலியின் இறுதி வடிவத்தை உருவாக்கி முடித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

“எனது ‘ஸைனோ ஃபிளிக்ஸ்’ செயலியின் உதவியோடு ஒருவர் தனக்குப் பிடித்தமான காணொளிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்ய இயலும். பின்னர் அந்தக் காணொளிகளை விற்கவோ அல்லது பிற காணொளிகளை வாங்கவோ இயலும்.

“அதற்கேற்ற அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் இச்செயலியில் உள்ளன. இதன் மூலம் நாள்தோறும் கணிசமான வருமானத்தை ஈட்ட முடியும்,” என்றார் உதய் பிரகாஷ்.

கல்வி, மருத்துவம், அழகுக் குறிப்புகள், சமையல் குறிப்புகள், குறும்படங்கள் என அனைத்து தகவல் சார்ந்த காணொளிகளை பதிவேற்றம் செய்வதன் மூலம் உலகம் முழுவதும் இவற்றை வாங்க விரும்புகிறவர்கள் ‘ஸைனோ ஃபிளிக்ஸ்’ செயலி மூலம் விலை கொடுத்து வாங்க முடியும் என்று உதய் பிரகாஷ் கூறினார்.

இதனால் இரு தரப்பும் பயனடையலாம் என்றார் அவர். பல்வேறு தரப்பினரும் உதய் பிரகாஷுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர். புதுச் செயலிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்