சென்னை: அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுடன் அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
‘மக்களவைத் தேர்தல் 2024 - மையப்புள்ளி’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார்.
அப்போது பேசிய அவர், தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு அதிமுக நிர்வாகிகள் அனைவரும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியிடும் தகவல்கள், பொய் விவரங்கள், கேலி, கிண்டல் பதிவுகளுக்கு அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு உடனடியாக தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அதிமுக ஆட்சியின் சாதனை விவரங்களை மாநிலம் முழுவதும் உள்ள வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் பழனிசாமி அறிவுறுத்தினார்.