பூங்கொத்துக்குப் பதில் புத்தகம் தரும்படி எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

பூங்கொத்துக்குப் பதில் புத்தகம் தரும்படி எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

1 mins read
e777dc60-5a58-41bc-b4a6-4290f64fa4b9
எடப்பாடி பழனிசாமி. - படம்: ஊடகம்

சென்னை: பூங்கொத்துக்குப் பதிலாக கருத்தாழமிக்க புத்தகங்களை வழங்கினால் நான் பெருமகிழ்ச்சி அடைவேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னை நேரில் சந்திக்க வரும் கட்சி நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் நான் பங்கேற்கும் கழக நிகழ்ச்சிகளில் பூங்கொத்து வழங்குவதை தவிர்க்கவும்.

“மாறாக, கருத்தாழமிக்க புத்தகங்களை வழங்கினால், பெருமகிழ்ச்சி அடைவேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்