தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பழனி கோயில்: வர்த்தக பயன்பாட்டிற்கு தடை

1 mins read
cb329f83-c83c-4f16-b02c-ca84d6b90c3d
பழனி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கிரி வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர் ஒருவர் நீதிமன்றத்தை நாடியதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. - படம்: தமிழக ஊடகம்

மதுரை: பழனி கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என்று உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பழனி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கிரி வீதியில் 500க்கும் மேற்பட்ட வியாபாரப் கடைகள் உள்ளன. பக்தர்கள் கிரி வீதியில் நடந்து செல்வதற்கு இடையூறாக வியாபாரிகள் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர் ஒருவர் நீதிமன்றத்தை நாடியதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழனியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போவதாக ஜனவரி 5ல் அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டது. இதை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது.

திங்கட்கிழமை அடிவாரம், கிரிவீதி பகுதிகளில் மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் 1,000க்கு மேற்பட்ட ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்பட்டன.

குறிப்புச் சொற்கள்