தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக குழு அமைப்பு

1 mins read
27ee8865-06ab-4dd8-8615-ba23566b85cb
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்களை அமைத்து அறிவித்துள்ளது அதிமுக.

இது குறித்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கெனவே திமுக, மதிமுக ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளை மேற்கொள்ள குழுக்களை அமைத்த நிலையில் தற்போது அதிமுகவும் குழுக்களை அமைத்து அறிவித்துள்ளது. விளம்பரத்துக்கென்றே ஒரு குழுவை அமைத்து கவனம் ஈர்த்துள்ளது.

குறிப்புச் சொற்கள்