முதுமலை முகாமில் யானைகள் கொண்டாடிய குடியரசு தினவிழா

1 mins read
9cc9b1aa-a317-44ab-9155-f65d6912b1fc
தேசியக் கொடி ஏற்றியபோது துதிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்திய யானைகள். - படம்: தமிழக ஊடகம்

முதுமலை: நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் 75-வது குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அம்முகாமில் 28 வளர்ப்பு யானைகள் உள்ளன.

அம்முகுட்டி, சங்கர், பாமா, கிருஷ்ணா உள்ளிட்ட யானைகளின் மீது தேசியக் கொடியுடன் பாகன்கள் அமர்ந்திருந்தனர். வனக் காப்பாளர், வேட்டை தடுப்புக் காவலர்கள் முன்னிலையில், காப்பக இணை இயக்குநர் திவ்யா தேசியக் கொடியை ஏற்றினார்.

அப்போது, அணிவகுத்து நின்ற யானைகள் பிளிறியபடி தங்கள் துதிக்கையை உயர்த்தி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின. தொடர்ந்து, யானைகளுக்கு சிறப்பு உணவு அளிக்கப்பட்டது. இவ்விழாவில், சுற்றுலாப் பயணிகளும் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்