கோடை காலத்தில் ஆவின் பொருள்களின் விற்பனையை 20% வரை அதிகரிக்க திட்டம்

சென்னை: கோடை காலத்தில் ஆவின் பால் பொருள்களின் விற்பனையை 20 விழுக்காடு வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆவின் ஐஸ் கிரீம், மோர் உள்ளிட்டவற்றின் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆவின் மேலாண்மை இயக்குநர் வினீத் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பால் பொருள்கள் விற்பனை வாயிலாக மாதந்தோறும் ரூ.45 கோடி வரை  ஆவின் நிறுவனத்துக்கு வருவாய் கிடைத்து வருகிறது.

தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், ஆவின் பால் பொருள்களின் விற்பனையை 20 விழுக்காடு வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வினீத், “வரும் கோடைகாலத்தில் ஆவின் பொருள்களின் விற்பனையை 20 விழுக்காடு வரை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம். கோடைகாலத்தில் ஆவின் ஐஸ் கிரீம்க்கு தேவை அதிக அளவில் இருக்கிறது.

“தமிழகத்தில் சென்னை அம்பத்தூர், சேலம், மதுரையில் ஐஸ் கிரீம் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இங்கு ஐஸ் கிரீம், குல்பி ஐஸ், மோர் உள்ளிட்ட பால் பொருள்களை அதிக அளவு தயாரிக்க நடவடிக்கை எடுத்து உள்ளோம். ஐஸ் கிரீம் வைக்கும் குளிரூட்டும் சாதனங்களைத் தயார் செய்ய உள்ளோம்.

“இதுதவிர, இந்த ஆண்டு கோடை காலத்தில் ஆவின் மோர் விற்பனையை 20 விழுக்காடு வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்,” என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!