தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மக்கள் சேவை செய்ய அதிமுகவில் இணைந்தேன்: கௌதமி

1 mins read
7687a6fd-7c2f-4f8f-81f6-5c9149e9993e
அதிமுகவில் இணைந்த கௌதமி. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: பாஜகவில் இருந்து விலகிய நடிகை கௌதமி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை புதன்கிழமை சந்தித்து அதிமுகவில் சேர்ந்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாக கட்சி மேலிடம் உறுதி அளித்ததாலேயே, அவர் அதிமுகவில் இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

செய்தியாளர்களை சந்தித்த நடிகை கௌதமி, “மக்கள் சேவை செய்ய அதிமுகவில் இணைந்துள்ளேன். மக்கள் சேவை செய்ய சரியான கட்சி அதிமுக. பாஜகவில் இருந்து விலகியதற்கான காரணங்களை உரிய நேரம் வரும்போது விளக்கமாகக் கூறுவேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்