ரயில் மோதி இளையர் பலி: 15 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட உடல்

ரயில் மோதி இளையர் பலி: 15 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட உடல்

1 mins read
b2ef4679-25f1-4fa3-b0c2-92330ff20717
திருமங்கலம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளையர் மீது அந்த ரயில் மோதியது. - படம்: ஊடகம்

மதுரை: ரயில் மோதி உயிர் இழந்தவரின் உடல் 15 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தை நேரில் கண்டவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை அன்று விருதுநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது திருமங்கலம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளையர் மீது அந்த ரயில் மோதியது.

இதில் அவர் உயிர் இழந்தார். அவரது உடல் ரயிலின் முன்பகுதியில் சிக்கிக் கொண்டது. ரயில் ஓட்டுநர் இதைக் கவனிக்கவில்லை. அந்த ரயில் திருமங்கலத்தை அடைந்தபோது அங்கு பணியில் இருந்த அதிகாரி ஒருவர் இளையரின் உடலைக்கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அந்த ரயில் கள்ளிக்குடி என்ற பகுதியில் நிறுத்தப்பட்டு, அரைமணி நேர போராட்டத்திற்குப் பிறகு இளையரின் உடல் அகற்றப்பட்டது. அதற்குள் அந்த ரயில் இளையரின் உடலோடு சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சென்றுவிட்டது.

குறிப்புச் சொற்கள்