தமிழர்களை இணைக்கும் தமிழ்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

1 mins read
efb7ed2b-0970-4fee-b5c1-b0f39917bc6d
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: உலகத் தாய்மொழி நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

“அனைத்து வேறுபாடுகளையும் அறுத்தெரிந்து உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் பேராற்றல் கொண்ட ஒற்றை அடையாளம் தமிழ்,” என்று அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பெயர்சூட்டலில், மேடைச் சொற்பொழிவுகளில், திரைப்பட உரையாடல்களில், அரசு ஆவணங்களில் என எல்லாத் தளங்களிலும் தமிழினைப் பிறமொழி ஆதிக்கத்தினின்று மீட்டு அதன் பழம்பெருமையை நிலைநாட்டிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்