தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜய்யை முதலில் அழைத்தது நான்தான்: கமல்

1 mins read
451dbdba-93b9-4c20-806f-1398625ed377
கமல், விஜய். - படம்: ஊடகம்

சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என முதன் முதலில் அழைப்பு விடுத்தது தாம்தான் என்று மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் திரை உலகில் இருந்து விலகி முழுநேர அரசியலுக்கு வருவது அவரது பாணி என்றார்.

“என் வழியில் நான் செல்கிறேன். நான் கோபத்தால் அல்லாமல், சோகத்தில் அரசியலுக்கு வந்தவன். என்னை அரசியலுக்கு வரவழைப்பது கடினம் என்றனர். என்னை வெளியேற்றுவது அதைவிடக் கடினம்,” என்று மநீம கட்சி யின் 7ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி செய்தியாளர்களை சந்தித்த போது கமல் கூறினார்.

குறிப்புச் சொற்கள்