கும்பகோணம்: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உருவப் படங்கள் எரிப்பு - 30 பேர் கைது

கும்பகோணம்: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உருவப் படங்கள் எரிப்பு - 30 பேர் கைது

1 mins read
6eefa423-3004-485e-b0fb-f654ba5a5b52
‘அமரன்’ படத்தைத் தயாரித்த கமல்ஹாசன் மற்றும் அப்படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் உருவப் படங்களை எரித்து அப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள். - படம்: ஊடகம்

கும்பகோணம்: நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உருவப் படங்களை எரித்த 30 பேரை கும்பகோணத்தில் காவல்துறை கைது செய்தது.

விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி என்ற அமைப்பினர் புதன்கிழமை கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் கூடி, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அமரன்’ திரைப்படத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘அமரன்’ பட டீசரில் காஷ்மீர் இளைஞர்களையும், போராட்டத்தில் ஈடுபடுவோரையும், பயங்கரவாதிகளாக சித்திரித்துள்ளதாக கண்டித்து, அந்தத் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான கமலஹாசன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரது உருவப் படங்களை எரித்து அவர்கள் கண்டன முழக்கமிட்டனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்