சென்னை: தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணியைச் சேர்ந்து ஐந்து எம்.பி.க்களை காணவில்லை என்று அந்தந்தத் தொகுதிகளில் மர்ம சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.
காஞ்சிபுரம் எம்பியாக திமுகவைச் சேர்ந்த செல்வத்தின் பெயரை குறிப்பிடாமல் காணவில்லை என்று தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு எம்பியாக உள்ள மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தியின் பெயரையும் குறிப்பிடாமல், எம்.பி.யைக் காணவில்லை என்று குமாரபாளையத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தென்காசி எம்பியான காங்கிரஸ் கட்சியின் தனுஷ் எம். குமாரையும் பெயர் குறிப்பிடாமல் காணவில்லை என்று கூறி ராஜபாளையத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் எம்பியாக முஸ்லிம் லீக் கட்சியின் நவாஸ் கனி உள்ளார். இவரையும் காணவில்லை என்று முதுகுளத்தூர் உள்ளிட்ட இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பழனிமாணிக்கத்தையும் பெயர் குறிப்பிடாமல், காணவில்லை என்று மன்னார்குடியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ஐந்து தொகுதிகளில் எம்பிக்களைக் காணவில்லை என்று மக்கள் ஒட்டியது போன்று ஒரே நாளில் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் யார் என்று காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

