சென்னை: வரும் மக்களவைத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்தை நாடவுள்ளோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஓ. பன்னீர் செல்வம், பா.ஜ.க கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் அவர், “பாஜகவுடன்தான் கூட்டணி என நிலைப்பாடு எடுத்துள்ளோம். நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம். இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உறுதியாக உள்ளது. அதற்காக இரட்டை இலைச் சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையத்தை நாட உள்ளோம்,” எனக் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தமிழகத்தில் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பிரதமர் மோடி எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் ஓ.பன்னீர் செல்வம் அவரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தார். ஆனால் இந்த முறை, கூட்டணித் தலைவர்கள் பங்கேற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்காதது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
திருப்பூர் பல்லடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். ஆனால், பா.ஜ.க.கூட்டணியில் இருப்பதாகக் கூறி வரும் ஓ. பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு இல்லை.
இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் பாஜகவுடன்தான் கூட்டணி நிலைப்பாடு எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓ.பி.ரவீந்திரநாத் குமார்
மதுரையில் புதன்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத், “வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட வாய்ப்பில்லை. தென் மாவட்டங்களில் எந்த மக்களவைத் தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடத் தயாராக இருக்கிறேன்.
“பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழ்நாடு வருகை தருவதற்கான வாய்ப்பு இருப்பதால் கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் எட்டப்படும். மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம்.
தொடர்புடைய செய்திகள்
“ஓரிரு நாட்களில் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. உடன் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி அமைப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும்,” என தெரிவித்தார்.

