தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக கனிமொழி எம்.பி. தனது மனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் கூட்டணிக் கட்சியினருக்கு இடையே பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், திமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து மார்ச் 1ஆம் தேதி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
நாளை வியாழக்கிழமை (மார்ச் 7) 6 மணி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என திமுக தலைமை தெரிவித்துள்ளது.
இந்தச்சூழலில், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய கனிமொழி எம்.பி., தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட தனது விருப்ப மனுவைத் தாக்கல் செய்தார்.
இதனிடையே, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

