பள்ளிக் கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தில் விஜய் படக்காட்சிகள்!

1 mins read
c7486a24-0d8e-438e-ab79-3664afa2418e
தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கத்திற்குள் ஊடுருவியவர்கள், அதில் விஜய்யின் ‘மாஸ்டர்’ படக்காட்சிகளை வெளியிட்டுள்ளனர். - படம்: ஃபேஸ்புக்

சென்னை: தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கம் மர்ம மனிதர்களால் இணைய ஊடுருவலுக்கு உள்ளாகியுள்ளது.

அப்பக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படக் காட்சிகள் இடம்பெற்ற பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) முதல் ‘மாஸ்டர்’ படக்காட்சிகள் அடங்கிய பதிவுகள் பள்ளிக் கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் திங்கட்கிழமையன்று காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

நூறாயிரம் பேருக்குமேல் பின்தொடர்ந்து வரும் அந்த ஃபேஸ்புக் பக்கத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்ந்த தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதேபோல், பள்ளிக் கல்வி தொடர்பான தமிழக அரசின் திட்டங்கள், மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவது எப்படி என்பது போன்ற மாணவர்களுக்குப் பயனுள்ள தகவல்களும் அப்பக்கத்தில் பதிவேற்றப்பட்டு வந்தன.

இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தினுள் நுழைந்த இணைய ஊடுருவிகள், அதில் திரைப்படக் காட்சிகளை வெளியிட்டு வருவதால் மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்