தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்டாலின்: மோடியின் பத்தாண்டு காலத் தோல்வியால் விரக்தியில் மக்கள்

2 mins read
7e7d394e-ac56-40cb-a930-095e7529abff
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: “நரேந்திர மோடி ஆட்சியின் பத்தாண்டு ஆண்டு காலத் தோல்வியால் இந்திய மக்கள் விரக்தியில் உள்ளனர். தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் மக்களின் விரக்தி வரும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.

“மோடி ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வரும்போதும் அவரது தவறுகளே மக்கள் நினைவுக்கு வரும். போதைப்பொருள்களை தடுக்கக்கோரி பழனிசாமி நடத்திய போராட்டம் அரசியல் நாடகம். அதிமுக ஆட்சியில் டிஜிபி மீது குட்கா வழக்குப் பதிவு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அண்மையில் தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவ்வகையில் தேர்தல் பத்திர ஊழல் பாஜகவின் முகமூடியை கிழித்துள்ளது,” எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் பத்திரம் மூலம் ஊழலையே பாஜக சட்டபூர்வமாக செய்துள்ளது. தேர்தல் பத்திர தில்லுமுல்லுகள் அமலாக்கத்துறை செயல்பாட்டை அம்பலப்படுத்தி உள்ளது.

உண்மையான ஊழல் கட்சி பாஜக தான் என்பது தேர்தல் பத்திர ஊழல் மூலம் அம்பலமாகியுள்ளது. மற்ற கட்சிகளை ஊழல் கட்சி என்று விமர்சித்துள்ள பாஜக தான் உண்மையான ஊழல் கட்சி. அமலாக்கத்துறையின் சோதனைகளுக்கு ஆளான சில நாள்களில் ஏராளமான நிறுவனங்கள் தாராளமாக பாஜகவுக்கு நிதி உதவி வழங்கியுள்ளன.

அமலாக்கத்துறை மூலம் மிரட்டி நிறுவனங்களிடமிருந்து பல கோடி பறித்துள்ளதால் பாஜக கட்சிதான் ஊழல் கட்சி என மக்கள் உணர்ந்துள்ளனர். இந்தி திணிப்பின் போது இரட்டை மொழிக் கொள்கையில் உறுதியாக இருந்தது போல் சி.ஏ.ஏ வை அமல்படுத்த மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

திமுக பற்றி பிரதமர் மோடி தவறான தகவல்களை பேசி வருகிறார். தமிழ்நாட்டுக்குச் செய்த திட்டங்கள் என்னென்ன என்று கேள்வி எழுப்பினால் பாஜகவினர் அதற்கு பதிலளிப்பதில்லை. வதந்திகளைப் பரப்பி பாஜகவினர் கவனத்தைத் திசை திரும்புகின்றனர். மத்திய அரசின் எந்தத் திட்டம் தமிழ்நாட்டில் முடக்கப்பட்டது என்று கேட்டால் பாஜகவினரிடம் பதில் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்