ஓபிஎஸ் தரப்புக்கு நிரந்தரத் தடை

ஓபிஎஸ் தரப்புக்கு நிரந்தரத் தடை

1 mins read
d192b247-148e-4cdd-8dc0-0d06a0af9e27
ஓ.பன்னீர்செல்வம். - படம்: ஊடகம்

சென்னை: அதிமுக சின்னத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உரிமைகேட்டு வழக்கு தொடுக்க நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில்தான் தனது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் அறிவித்து இருந்தார்.

இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என பழனிசாமி கோரி இருந்தார்.

இந்த மனு மீதான தீர்ப்பு திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.

அதன்படி அதிமுகவின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்த நிரந்தரத்தடை விதிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்