கனிமொழி: பாஜகவினர் சொல்வதை மக்கள் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள்

கனிமொழி: பாஜகவினர் சொல்வதை மக்கள் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள்

1 mins read
090119d4-3d75-4843-9cb2-30503f0d807a
கனிமொழி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: பாஜகவினர் கூறும் கருத்துகளை எல்லாம் மக்கள் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள் என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தமிழகத்தில் திமுக, அதிமுக இடையேதான் போட்டி நிலவுகிறது என்றார்.

“பாஜகவை மக்கள் கருத்தில் கொள்ள மாட்டார்கள். அவர்கள் சவால் விடட்டும். வாக்கு எண்ணும்போது பார்த்துக் கொள்ளலாம். பாஜக ஆளும் மாநிலங்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். தமிழ்நாடு முன்னேறிய மாநிலங்களில் முக்கியமானது.

“தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. முதலில் நாட்டை காப்பாற்ற வேண்டும்,” என்றார் கனிமொழி.

குறிப்புச் சொற்கள்