பிரதமர் குறித்து அவதூறு: தமிழக அமைச்சர்மீது வழக்குப்பதிவு

பிரதமர் குறித்து அவதூறு: தமிழக அமைச்சர்மீது வழக்குப்பதிவு

1 mins read
e4201141-9050-49ec-8612-da0be5d58298
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். - படம்: ஊடகம்

தூத்துக்குடி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இம்மாதம் 22ஆம் தேதி நடந்த திமுக கூட்டத்தின்போது பிரதமர் மோடி குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 24) தமிழக பாஜக துணைத் தலைவா் கே.நாகராஜன், மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன் ஆகியோா் தமிழகத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவைச் சந்தித்து புகாா் அளித்தனா்.

அதனைத் தொடர்ந்து, மெய்ஞானபுரம் காவல் நிலையம், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் பிரிவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்