கன்னியாகுமரியில் வெடித்துச் சிதறிய பாறைகள்

கன்னியாகுமரியில் வெடித்துச் சிதறிய பாறைகள்

1 mins read
db346aaf-7e70-4347-8105-e10e0a131562
மலையுச்சியில் ஏற்பட்டுள்ள வெடிப்பு - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மலையோரப் பகுதியான பத்துகாணி மலைப்பகுதியில் மார்ச் 27ஆம் தேதி (புதன்கிழமை) காலை திடீரெனப் பாறைகள் வெடித்துள்ளன. உயரமான மலைப்பகுதியில் இருந்து பாறைகள் உருண்டு கீழ் நோக்கி வந்துள்ளன. மேலும் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாகவும் இருந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கிளாமலை பகுதி காப்பு காடுகள் நிறைந்த மலைத் தொடராகும். இப்பகுதியையொட்டி பத்துகாணி, கீழ் மலை, ஒருநூறாம் வயல், புறத்தி மலை உள்ளிட்ட பழங்குடி குடியிருப்புகள் உள்ளன.

இந்நிலையில் புதன்கிழமை பிற்பகலில் கிளாமலை உச்சியிலிருந்து ஒரு பெரும் பாறை திடீரென்று பெயா்ந்து வந்து கீழ் நோக்கி நீண்ட தூரம் உருண்டு விழுந்தது. இதை தொலைவிலிருந்து பாா்த்த அப்பகுதி பழங்குடி மக்கள் அச்சமடைந்தனா்.

பழங்குடி மக்களுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாகத்தான் பாறைகள் வெடித்துச் சிதறி இருக்கலாம். பருவ நிலை மாற்றத்தினால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பாறைகள் உடைந்து குடியிருப்பு வீடுகளின் மேல் விழும் நிலை உள்ளது. இதனால் மலைவாழ் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டு உள்ளது என அப்பகுதியில் வாழும் மக்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்