விவசாயிகள் சங்கம் அதிமுகவுக்கு ஆதரவு

விவசாயிகள் சங்கம் அதிமுகவுக்கு ஆதரவு

1 mins read
429fa80e-848e-44dc-a0e0-44bf0ac02a23
சங்கத் தலைவர் சின்னுசாமி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து எடப்பாடி பழனிசாமியிடம் கடிதம் வழங்கினார். - படம்: ஊடகம்

சேலம்: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரிக்கப் போவதாக தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அச்சங்கத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.

அப்போது சங்கத் தலைவர் சின்னுசாமி விவசாயிகள் சங்கம் சார்பில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்ததுடன் நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு முன்னெடுப்பு மேற்கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என்றார்.

எனவே, விவசாயிகளின் எதிர்கால நலன் கருதி அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்றார் சின்னுசாமி.

இதற்கிடையே, வேறு சில விவசாய சங்கங்கள் திமுகவுக்கு ஆதரவு அளிக்க இருப்பதாக திமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்